search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் சிறப்பாக செயல்படுகிறது: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் சிறப்பாக செயல்படுகிறது: அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழக அரசுக்கு பலநிதி நெருக்கடி இருந்த போதிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கோபி:

    கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி அனைவரையும் வரவேறார்.

    திருப்பூர் எம்.பி. சத்திய பாமா முன்னிலை வகித்தார். விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட அளவில் 13,577 பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கி பேசினர்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் பொருட்டு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

    இனிவரும் ஆண்டுகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் படிக்கும் போதே விலையில்லா மடி கணினிகள் வழங்கப்படும். இந்த அரசுக்கு பலநிதி நெருக்கடி இருந்த போதிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    தற்போது பொதுத்தேர்வு மையங்கள் 20, 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அதை மாற்றி 10 கி.மீ. தூரத்திற்குள் பொதுத்தேர்வு மையங்கள் இருக்கும். இதன் மூலம் மாணவ-மாணவிகள் மன உளைச்சல் இல்லாமல் பொதுத் தேர்வை சிறப்பாக எழுத முடியும். தற்போது உள்ளதை விட 1,000 மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.

    இந்த கல்வியாண்டு முதல் இது செயல்படுத்தப்படும். மாணவ- மாணவிகளுக்கு இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு முனைப்புடன் உள்ளது. தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ். அகாடமி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்.டி.ஓ. கோவிந்த ராஜன், தாசில்தார் பூபதி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், பள்ளி தாளாளர் கருப்பணன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×