search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி மதுமதி
    X
    மாணவி மதுமதி

    மன்னார்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி

    மன்னார்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலியானார். திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் 30 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மன்னார்குடி சேர்ந்த கல்லூரி மாணவி பலியாகி உள்ளார்.

    மன்னார்குடி நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுராமன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் மதுமதி (வயது 19). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் சி.ஏ. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மதுமதி காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்த அவர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. பின்னர் மேல் சிசிக்சைக்காக அவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலனின்றி இன்று காலை மதுமதி பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். தற்போது மாணவியும் பலியாகி உள்ளதால் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.


    Next Story
    ×