search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலி
    X

    பழனியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலி

    பழனியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலியானான். இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பழனி நகர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    பழனி:

    பழனி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. அவரது மகன் ஹரிவிஷ்ணு. (வயது 8). அந்த பகுதியில் அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த சிலநாட்களாக இவன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். எனவே ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஹரிவிஷ்ணு அனுமதிக்கப்பட்டு இருந்தான். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

    உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரிவிஷ்ணு இன்று காலை இறந்தான்.

    பழனி பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பழனி நகர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×