search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியினர்- அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியினர்- அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

    சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    சேலம்:

    தர்மபுரியில் இன்று பிற்பகல் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சேலத்திற்கு வந்தார்.

    மாவட்ட எல்லையான சங்ககிரியில் கலெக்டர் ரோஹிணி பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.

    பின்னர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பன்னீர் செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இன்று காலை வீட்டில் வைத்து சேலம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சில அறிவுரைகளை வழங்கினார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

    பிற்பகல் வீட்டில் இருந்து தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டு செல்கிறார். விழா நிறைவடைந்ததும் மீண்டும் சேலத்திற்கு வரும் அவர் இரவில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார்.

    நாளை (8-ந்தேதி) காலை எடப்பாடிக்கு செல்லும் அவர் எடப்பாடி பஸ் நிலையம் முன்பு உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே ரூ.2.69 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பயனாளிகளுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    நாளை மாலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தல் இருந்து ஈரோடுக்கு செல்லும் அவர் புதிய காவிரி பாலத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்கிறார்கள்.
    Next Story
    ×