search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் முன்பதிவுக்கு எல்லா வங்கி ஏ.டி.எம். அட்டைகளையும் பயன்படுத்தலாம்: ஐ.ஆர்.சி.டி.சி.
    X

    ரெயில் முன்பதிவுக்கு எல்லா வங்கி ஏ.டி.எம். அட்டைகளையும் பயன்படுத்தலாம்: ஐ.ஆர்.சி.டி.சி.

    ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு எல்லா வங்கிகளின் ஏ.டி.எம். அட்டைகள், கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
    சென்னை:

    ரெயிலில் 4 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யக்கூடிய வசதி இருப்பதால் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு மையங்களிலும் சென்று டிக்கெட் பெறுகின்றனர்.

    வீடு மற்றும் அலுவலங்களில் இருந்தபடியே இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) மூலமாக ஆன்லைனில் தினமும் லட்சணக்கான பயணிகள் முன்பதிவு செய்கின்றனர்.

    வரிசையில் காத்து நிற்காமல், ரெயில் நிலையங்களுக்கு அலைந்து திரியாமல் ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ரொக்கமாக பணம் செலுத்துவதற்கு பதிலாக வங்கி பற்று அட்டை (ஏ.டி.எம். கார்டு) கடன் அட்டை (கிரெடிட் கார்டு) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    இந்த நிலையில் ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளத்தில் சில வங்கிகளின் ஏ.டி.எம்., கிரெடிட் அட்டைகளுக்கு தடை மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட சில வங்கிகளின் ஏ.டி.எம்., கிரெடிட் அட்டைகளை கொண்டே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிக்கெட் முன்பதிவுக்கு எந்த வங்கிகளின் ஏ.டி.எம். அட்டைகளுக்கும், கிரெடிட் அட்டைகளுக்கும் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை.

    மாஸ்டர் அல்லது விசா வசதியுடைய இந்தியாவைச் சேர்ந்த எந்த வங்கிகளின் ஏ.டி.எம்., கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி, ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் இருக்கும் 7 வழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×