search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 லட்சம் விவசாயிகளை திரட்டி பாராளுமன்றம் முற்றுகை: திருச்சியில் அய்யாக்கண்ணு
    X

    5 லட்சம் விவசாயிகளை திரட்டி பாராளுமன்றம் முற்றுகை: திருச்சியில் அய்யாக்கண்ணு

    தமிழக விவசாயிகள், வட மாநில விவசாயிகள் 5 லட்சம் பேரை திரட்டி பாராளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கும் தினத்தன்று பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
    திருச்சி:

    நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அய்யாக்கண்ணு நேற்று திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே 41 நாட்கள் டெல்லியில் முதல் கட்ட தொடர் போராட்டம் நடத்தினோம். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் 2-ம் கட்டமாக ஜந்தர்மந்தரில் தினமும் ஒரு போராட்டம் நடத்தி வருகின்றோம். ஆனாலும் பிரதமர் விவசாயிகளின் கோரிக்கையை இதுவரை காது கொடுத்து கேட்கவில்லை. பிரதமரின் இந்த செயல் நாட்டின் முதுகெலும்பு என்று போற்றக்கூடிய விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றம் அளித்து உள்ளது.

    எனவே தமிழக விவசாயிகள், வட மாநில விவசாயிகள் 5 லட்சம் பேரை திரட்டி வருகிற நவம்பர் மாதம் 20-ந்தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கும் தினத்தன்று டெல்லி ஜந்தர்மந்தரில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்று முற்றுகையிடுவோம். பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எங்கள் நிலையை எடுத்து கூறுவோம்.

    மறு நாள் அதாவது 21-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் கிசான் பார்லிமெண்ட் என்ற கூட்டத்தை நடத்த இருக்கிறோம். இது விவசாயிகளுக்கான ஒரு மாதிரி பாராளுமன்ற கூட்டத்தை நடத்துவது போல் இருக்கும். இதில் 543 விவசாயிகள் பேசுவார்கள். இது 32 நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×