search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்-கெஜ்ரிவால் சந்திப்பால் ஒன்றும் நடக்கப்போவதில்லை: உதயகுமார் பேட்டி
    X

    கமல்-கெஜ்ரிவால் சந்திப்பால் ஒன்றும் நடக்கப்போவதில்லை: உதயகுமார் பேட்டி

    நடிகர் கமல்ஹாசன், கெஜ்ரிவால் சந்திப்பால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறு கிராம பொதுமக்கள் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி தலைவருமான சுப.உதயகுமார் தலைமையில் திரண்டு வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறு பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே வைராவிகிணறு, கூடங்குளம், இடிந்தகரை பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத் துள்ளனர். இதைத்தொடர்ந்து போராட்டங்களும் நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் இதை மீறி பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வைராவிகிணறில் மதுக்கடை திறக்கப் பட்டுள்ளது. இதை நிரந்தரமாக மூட வேண்டும் என கூறியிருந்தனர்.

    பின்னர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வைராவிகிணறு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும். கூடங்குளம் முதல் இரண்டு அணு உலைக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் தற்போது மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்துள் ளனர். இதனால் அணுமின் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமில்லை.

    எனவே மீண்டும் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். அந்த போராட்டம் நாடு தழுவிய அளவில் இந்தியா முழுவதும் இருக்கும். 3, 4-வது அணு உலைகள் அமைக்க கூடாது என்பதிலும், முதல் இரண்டு அணு உலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். முதல் இரண்டு அணு உலைகளின் கழிவு உதிரி பாகங்கள் விற்பதில் முறைகேடு நடந்துள்ளது.

    இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்தி உள்ளார்கள். எற்கனவே காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்திய பா.ஜ.க. அரசு அணு உலை விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? காங்கிரஸ் செய்த தவறை பா.ஜ.க. மூடி மறைக்கிறது.

    ரஜினி-கமல் அரசியலுக்கு வர அவர்களுக்கு உரிமை உள்ளது. வெறும் சினிமா பிரபலம், பணபலம் ஆகியவற்றை வைத்து குறுக்கு வழியில் அரசியலுக்கு வரக்கூடாது. கமல், ரஜினி இருவருமே மக்கள் பிரச்சினையில் புரிதல் இல்லாதவர்கள். அவர்கள் சினிமாவை விட்டு விலகி மக்கள் பிரச்சினைக்காக போராட வேண்டும்.

    கமல், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஏற்கனவே நாங்கள் ஆம்- ஆத்மி கட்சியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தோம். ஆனால் அணு உலை விவகாரத்தில் அவர்களின் நிலைபாடு சரியில்லாததால் கட்சியில் இருந்து விலகி விட்டோம். இவர்களால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்திட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×