search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசிமேட்டில் 140 பவுன் நகை கொள்ளையில் 2 வாலிபர்கள் கைது
    X

    காசிமேட்டில் 140 பவுன் நகை கொள்ளையில் 2 வாலிபர்கள் கைது

    காசிமேட்டில் விசை படகு உரிமையாளர் வீட்டில் 140 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    காசிமேடு காசிமா நகர் 1-வது தெருவை சேர்ந்த பாஸ்கர் விசை படகு உரிமையாளர். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு பெரியபாளையம் கோவிலுக்கு சென்றிருந்த போது கடந்த 10-ந்தேதி இரவு கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த 140 பவுன் நகை, ரூ.9 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாஸ்கர், குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றதை நன்கு நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கித்தனர். இதைடுத்து போலீசார் மாறு வேடத்தில் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த ஜெயசீலன் அடிக்கடி பாஸ்கர் வீட்டை நோட்டமிட்டபடி சென்றார். இதை கண்காணித்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது 140 பவுன் நகையை தனது நண்பர் நெற்குன்றத்தை சேர்ந்த எழிலுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாக தெரிவித்தான்.

    இதையடுத்து எழிலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கினார். அவர்களிடமிருந்து இதுவரை 100 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×