search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை வரலாற்றில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தகுதி நீக்கம்
    X

    தமிழக சட்டசபை வரலாற்றில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தகுதி நீக்கம்

    தமிழக சட்டசபை வரலாற்றில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு இஷ்டம் போல் கட்சி மாறுவதை தடுப்பதற்காக தகுதி நீக்க நடவடிக்கை சட்டம் 1985-ல் கொண்டு வரப்பட்டது.

    இந்த சட்டம் முதல் முதலில் தமிழகத்தில் கையில் எடுக்கப்பட்டது. 1988-ல், அப்போது பி.எச்.பாண்டியன் சபாநாயகர்.

    1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டது. ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு அணியாகவும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டனர்.

    பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள் (98 பேர்) ஜானகிக்கு ஆதரவாக இருந்தனர். ஜெயலலிதாவை 28 எம்.எல். ஏ.க்கள் ஆதரித்தனர்.

    இதையடுத்து 1988 ஜனவரி 28-ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அன்று சட்டசபை ஒரு போர்க்களமாகவே மாறியது.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 33 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தகுதி நீக்கம் செய்தார்.

    ஆட்சியை தற்காலிகமாக காப்பாற்றினாலும் இரண்டு நாளில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல். ஏ.க்களில் இன்றைய சபாநாயகர் தனபாலும் ஒருவர். எந்த சட்டசபைக்குள் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாரோ அதே சட்ட சபைக்குள் இன்று 18 பேரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதன் பிறகும் இரண்டு முறை எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவைகள் ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் வகையில் நடைபெற்றவை அல்ல.

    1995-ல் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜி.விசுவநாதன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ம.தி.மு.க.வில் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    2000-ம் ஆண்டில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துராமலிங்கம் அ.தி.மு.க.வுக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 18-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோரிய போதும் கொறடா உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தரப்பில் வலியுறுத்தவில்லை.

    2011, 2016 ஆகிய ஆண்டுகளில் 8 தே.மு.தி.க. எம்.எல். ஏ.க்கள் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளானார்கள். அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.

    இப்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல் லோரிடமும் இருக்கிறது.
    Next Story
    ×