search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த தேர்வாக இருந்தாலும் சந்திக்க தயாராக இருப்போம்: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    எந்த தேர்வாக இருந்தாலும் சந்திக்க தயாராக இருப்போம்: அமைச்சர் செங்கோட்டையன்

    மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் சந்திக்க தயாராக இருப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பெரியசாமி தொடக்கப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார். சத்தியபாமா எம்.பி. குத்துவிளக்கேற்றி வைத்தார்.

    விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்களை ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தனர்.

    படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு உத்திரவாதத்தை தரும் வகையில் பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க இருக்கிறோம்.

    மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். மாணவர்கள் அந்த தேர்வை சந்திக்கும் வகையில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு சிறந்த கல்வியாளர்கள் மூலம் பயிற்சி அளிப்போம். சென்னையில் இருந்து இணை இயக்குனர்களை ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு மத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் சிறந்த பயிற்சி அளிக்கும் பேராசிரியர்களை தேர்வு செய்து வரவழைப்போம். இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகளை தொடங்கி விடுவோம்.

    தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரம் ஒன்றியம், நகரங்கள் வாயிலாக 412 மையங்கள் அமைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்து உள்ளோம். இந்திய அளவில் தமிழகத்தை கல்வி துறையில் முன்னோடி மாநிலமாக திகழ பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    விழாவில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் உள்பட அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாணவர்கள் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பெரியசாமி பள்ளி கல்வி தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான என்.ஆர்.கோவிந்தராஜ் வரவேற்றார். முடிவில் தொடக்க கல்வி அதிகாரி முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
    Next Story
    ×