search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லல்லு கட்சி எம்.பி முகம்மது தஸ்லிமுத்தின் சென்னையில் மரணம்
    X

    லல்லு கட்சி எம்.பி முகம்மது தஸ்லிமுத்தின் சென்னையில் மரணம்

    உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி முகம்மது தஸ்லிமுத்தின் (74) இன்று காலமானார்.
    சென்னை:

    பீகார் மாநிலம் அராரியாவில் 1943-ம் ஆண்டு பிறந்த முகம்மது தஸ்லிமுத்தின் 1969-ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989-ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக தேர்வானார்.

    1996-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அராரியா தொகுதி எம்.பி.ஆக இருக்கும் தஸ்லிமுத்தின், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×