search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 நாட்களாக செயற்கை நுரையீரலுடன் உயிர் வாழும் ஆசிரியை: டாக்டர்கள் சாதனை
    X

    20 நாட்களாக செயற்கை நுரையீரலுடன் உயிர் வாழும் ஆசிரியை: டாக்டர்கள் சாதனை

    20 நாட்களாக செயற்கை நுரையீரலுடன் உயிர் வாழும் புதுச்சேரியை சேர்ந்த பள்ளி ஆசிரியை,மியாட் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    சென்னை:

    புதுச்சேரியை சேர்ந்த பள்ளி ஆசிரியை வித்யா. சாலை விபத்தில் இவர் படுகாயம் அடைந்தார். அவரது அடிவயிறு, இடுப்பு எலும்பு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.

    விபத்து நடந்தவுடன் அவருக்கு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் குறைந்த ரத்தம் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படுவதை கண்டறிந்தனர். எனவே அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.

    இதுகுறித்து டாக்டர்கள் மேலும் ஆய்வு செய்து ஆசிரியை வித்யாவுக்கு செயற்கை நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர். அதை தொடர்ந்து அவருக்கு கூடுதலாக உடல் சார்ந்த ஆக்சிஜன் சுவர் கருவி பொருத்தப்பட்டது.

    இக்கருவி செயற்கை நுரையீரல் வழியாக ரத்தத்தை உடல்பகுதிக்கு செலுத்தும் திறன் கொண்டது. இதன் மூலம் நுரையீரலில் உள்ள காயம் ஆறி குணமாகும் வரை இதை தொடர்ந்து செயல்படுத்த டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர்.

    செயற்கை நுரையீரல் பொருத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது வித்யாவின் உடல் நிலை சீராக உள்ளது. 37 நாட்களுக்கு பிறகு தற்போது செயற்கை சுவாச கருவி இன்றி அவரால் சுவாசிக்க முடிகிறது. 56 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    Next Story
    ×