search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமல்ஹாசன்
    X

    பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமல்ஹாசன்

    தந்தை பெரியாரின் 139-வது பிறந்த நாளான இன்று தனது ஸ்டைலில் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 139-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது கருத்துக்கள், புகைப்படங்களை காலை முதலே சமூக வலைதளங்களில் அதிகமானோர் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பெரியாரின் பிறந்த நாளுக்காக நடிகர் கமல்ஹாசன் தனது ஸ்டைலில் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். “அவர் (பெரியார்) செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்.பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×