search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. சார்பில் தூர் வாரிய குளத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
    X

    தி.மு.க. சார்பில் தூர் வாரிய குளத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    தி.மு.க. சார்பில் தூர் வாரப்பட்ட குளத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருங்குளம், நடுக்குளம் (பகடைக்குளம்) செம்பட்டி அருகே உள்ள புல்வெட்டி குளம் ஆகிய மூன்று குளங்களும், இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இப்பகுதி விவசாயிகள் குளங்களின் நீர் ஆதாரத்தை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் முதலில் கருங்குளம் நிரம்பி அதன் பின்பு நடுக்குளம், புல்வெட்டி குளத்திற்கு நீர் வருவது போல் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    கடந்த 100 ஆண்டுகளாக கருங்குளம் தூர் வாரப்படாமல் இருந்தது. ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி குளத்தை தூர்வார உத்தரவிட்டார். அதன்படி 400 ஏக்கர் நிலப்பரப்புள்ள கருங்குளம் முற்றிலும் தூர்வாரப்பட்டது.

    இதனால் கருங்குளத்துக்கு தண்ணீர் வரத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குளத்தில் ஓரளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இந்த குளத்தை மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் குளம் தூர் வாரும் பணி ஸ்டாலின் உத்தரவுப்படி நடைபெற்றது. அதே போல் ஆத்தூரிலும் கருங்குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டதால் அங்கு தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அவரிடம் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×