search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 போலீசாருக்கு டெங்கு காய்ச்சல்: சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    X

    7 போலீசாருக்கு டெங்கு காய்ச்சல்: சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    7 போலீசாருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதால். அவர்கள் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னையில் டெங்கு பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே டெங்குவால் போலீசார் பாதிக்கப்பட்டு முறையாக சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

    தட்டணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு தட்டணுக்கள் ஏற்றப்படுகிறது. 3 அரசு ஆஸ்பத்திரியிலும் சுமார் நூற்றுக்கும் மேலானவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 164 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 39 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இவர்களில் 7 பேர் போலீசார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சருடன் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    Next Story
    ×