search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி உருவபொம்மை எரிப்பு: முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 17 பேர் கைது
    X

    முதல்-அமைச்சர் எடப்பாடி உருவபொம்மை எரிப்பு: முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 17 பேர் கைது

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்ததாக முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    அ.தி.மு.க. அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் அவர்கள் இறங்கி உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலும், உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் தினகரன் ஆதரவாளர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை எரித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று உருவ பொம்மையை கைப்பற்றியதோடு, இன்பத்தமிழன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    இதே போல் அருப்புக் கோட்டையை அடுத்த காரியாபட்டியில், உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவசாமி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையத்தில் உருவபொம்மை எரிப்பு தொடர்பாக, 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேத்தூரில் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா பாண்டியன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மை எரிப்பில் தினகரன் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×