search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு - கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு
    X

    வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு - கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு

    பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. இங்கு வருடம் முழுவதும் இதமான அளவில் தண்ணீர் விழுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானல் வட்டக்காணல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கும்பக்கரை அருவியில் குளிக்க மற்றும் சுற்றிபார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீரின் அளவு குறையவில்லை. எனவே இன்று 4-வது நாளாக தடை தொடர்கிறது. வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவில் நீர் வரும்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×