search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் எலக்ட்ரிக் பஸ் ஒரு மாதம் சோதனைக்காக விடப்படுகிறது
    X

    சென்னையில் எலக்ட்ரிக் பஸ் ஒரு மாதம் சோதனைக்காக விடப்படுகிறது

    சென்னை சாலையில் எலக்ட்ரிக் பஸ்களை எந்தெந்த வழித்தடங்களில் இயக்கலாம் என்று ஆராயப்பட்டு, எலக்ட்ரிக் பஸ்களில் சில மாற்றங்களை செய்து மீண்டும் ஒரு மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மாநிலத்தில் எலக்ட்ரிக் பஸ் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார். மாநகர பஸ் பராமரிப்பு செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எலக்ட்ரிக் பஸ்களை படிப்படியாக இயக்க மாநகர போக்குவரத்து கழகம் ஈடுபட்டுள்ளது.

    ஏற்கனவே 2 முறை எலக்ட்ரிக் பஸ் சோதனை சென்னை சாலையில் நடத்தியது. இதில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பயணம் செய்தனர். அப்போது சில குறைகளை அவர்கள் கண்டுபிடித்து அவற்றை சரிசெய்ய தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேலும் ஒரு மாதத்திற்கு எலக்ட்ரிக் பஸ் சோதனைக்காக இயக்கப்படுகிறது.

    சென்னையில் ஒரு சில வழித்தடங்களை ஆய்வு செய்து அதில் இந்த பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ‘‘புளுபிரிண்ட்’’ தயாரிக்கப்பட்ட பின்னர் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். 2 பஸ் நிறுவனங்கள் எலக்ட்ரிக் பஸ்களை தயாரித்து வழங்கிய பின்னர் சென்னையில் இந்த பஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும்.

    சென்னையில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க கூடிய வழித்தடங்களில் சாலைகள் எவ்வாறு உள்ளது என்பதை போக்குவரத்து கழக அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் ஆய்வு நடத்தி வருகின்றன. இத்திட்டத்தின் மனேஜர் டேனியல் ராபின் சன்கூறுகையில், ஒரே நேரத்தில் சென்னையில் அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடியாது. ‘பைலிட்’ திட்டமாக இதனை செயல்படுத்தும் வகையில் மாதம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். எலக்ட்ரிக் பஸ்கள் ஒவ்வொன்றாக தயாரிக்கப்பட்டு சென்னை மாநகர மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    இந்த பஸ்களில் ஏற்படும் டெக்னிக்கல் பிரச்சனைகளை கையாள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

    இது குறித்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வி.கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    சென்னை சாலையில் எலக்ட்ரிக் பஸ்களை எந்தெந்த வழித்தடங்களில் இயக்கலாம் என்று ஆராயப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் பஸ்களில் சில மாற்றங்களை செய்து மீண்டும் ஒரு மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரு மாதத்திற்கு ஒரு பஸ் வீதம் எலக்ட்ரிக் பஸ் விரைவில் இயக்கப்படும் என்றார்.

    இந்த எலக்ட்ரிக் பஸ் 2 முதல் 3 பேட்டரியில் இயக்கப்படுகிறது. பொதுவாக சார்ஜர் செய்யக்கூடிய பேட்டரிகள் இரவு நேரத்தில் இந்த பஸ்களில் சார்ஜர் செய்யப்படும். நீண்டதூரம் அல்லது அவசர நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடிய இந்த பஸ்கள் விரைவாக சார்ஜர் ஏற்றக்கூடிய பேட்டரிகளும் பொறுத்தப்படுகிறது. இந்த பஸ்களின் அதிக வேகம் 50 கிலோமீட்டர் ஆகும்.
    Next Story
    ×