search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
    X

    கேரளாவில் விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

    கேரளாவில் விபத்தில் பலியான நெல்லை வாலிபர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    கேரள மாநிலம், பாரிப்பள்ளி கொல்லம் சாலையில் 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடியிருப்பு மேலூரைச் சேர்ந்த முருகன் உயிரிழந்தார். முத்து என்பவர் பலத்த காயமடைந்தார்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த முருகன் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த முத்துவுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று 17.8.2017 அன்று அறிவித்தார்.

    அதன்படி முருகனின் மனைவி முருகம்மாளுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், காயமடைந்த முத்துவின் சார்பில் அவரது அண்ணன் மகாராஜனிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×