search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக நிதித்துறையை விட்டுக்கொடுத்த அமைச்சர் டி.ஜெயக்குமார்
    X

    அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக நிதித்துறையை விட்டுக்கொடுத்த அமைச்சர் டி.ஜெயக்குமார்

    அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக நிதித்துறையை விட்டுக்கொடுத்த அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் பாராட்டுகிறார்கள்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் நிதிதுறை மற்றும் மீன் வளத்துறைகளை வகித்து வந்தவர் அமைச்சர் டி.ஜெயக்குமார். அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களுள் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

    அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் அமைச்சர் டி.ஜெயக்குமார் திறம்பட செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்காக அரும் பணியாற்றினார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேத்துப்பட்டு ஏரியை பார்வையிட சென்ற அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக தனது நிதி அமைச்சர் பதவியை விட்டு கொடுக்கவும் தயார் என்று கூறினார்.

    தற்போது அ.தி.மு.க. அணிகள் இணைந்துள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது நிதி துறையை விட்டுக் கொடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பு வி‌ஷயத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் பங்களிப்பு உண்மையிலேயே போற்றுதலுக்குரியது. தன் பதவிக்கே ஆபத்து வரலாம் என்கிற நிலையில் கூட துணிச்சலாக தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த அதிர்ச்சி வைத்தியம்தான் இன்று அணிகள் இணைப்புக்கு அடிப்படையாக அமைந்தது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

    இயக்கம் நிலைக்க வேண்டும் என்பதற்காக தனி மனித ஆதாயத்தை, சுகங்களை, பதவியை யார் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார்களோ அவர்கள் சிறந்த தலைவர்களாக சமூகத்தில் மதிக்கப்படுகிறார்கள். இந்த வி‌ஷயத்திலும் அமைச்சர் ஜெயக்குமார் நடந்து கொண்ட விதம் பாராட்டுக் குரியது.

    அவர் பொறுப்பு வகித்த நிதி துறையை விட்டுக் கொடுத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்கிற நிலை வந்த போது துளியும் முரண்டு பிடிக்காமல் மகிழ்ச்சியோடு விட்டுக்கொடுத்த அவரது பண்பை தொண்டர்களும், எதிரணியினரும் கூட பாராட்டுகிறார்கள்.

    மக்களின் அன்பும், அவர்களுக்கு நாம் செய்யும் தொண்டுமே நிரந்தரம் என்பதை உணர்ந்த ஜெயக்குமாரைப் போன்ற முதிர்ச்சியும், பக்குவமும் நிறைந்த தலைவர்கள் இருக்கும் வரை எம்.ஜி.ஆர். உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்தெடுத்த அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்கிறார் அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர்.

    சமூக வலை தளங்களிலும் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு பாராட்டு குவிகிறது.

    Next Story
    ×