search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் அருகே ஐம்பொன் சிலை கொள்ளையர்கள் 4 பேர் கைது
    X

    அரக்கோணம் அருகே ஐம்பொன் சிலை கொள்ளையர்கள் 4 பேர் கைது

    அரக்கோணம் அருகே ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    நெமிலி அருகே உள்ள சம்பத்ராயன்பேட்டையில் வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் கிருஷ்ணர்-ராதை, ருக்மணி ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் அரக்கோணம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த கும்பலை பிடிக்க போலீஸ் சூப்பிரெண்டு பகலவன் அதிரடி உத்தரவிட்டார்.

    அரக்கோணம், டி.எஸ்.பி. குத்தாலிங்கம் மேற்பார்வையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று அரக்கோணம் எஸ்.ஆர். கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மேலாந்துறையை சேர்ந்த தினேஷ், நாகவேடு காலனியை சேர்ந்த விஜயகுமார் என்று தெரியவந்தது.

    அவர்கள் வந்தது திருட்டு பைக் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    இவர்கள் கூட்டாளிகளான மேல்பாக்கம் அஜித்குமார், மேல்களத்தூர் சீனு ஆகியோருடன் சேர்ந்து வேணுகோபால சாமி கோவில் மற்றும் கும்மினிபேட்டையில் ஒரு வீட்டில் புகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து போலீசார் அரக்கோணத்தில் பதுங்கியிருந்த அஜித் குமார், சீனு, ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    மேலும் கோவிலில் கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகள், வீடுகளில் கொள்ளையடித்த 10 பவுன் நகை, ஒரு பைக், 2 சிலிண்டர்கள், பேட்டரி, ஸ்டவ் அடுப்பு மின்விசிறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தினேஷ், விஜயகுமார், அஜித்குமார், சீனு ஆகி யோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×