search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: கிருஷ்ணகிரி - தர்மபுரி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: கிருஷ்ணகிரி - தர்மபுரி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கே.ஆர்.பி. அணையின் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி உள்ளது. அந்த அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    இந்த தண்ணீர் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு வருகிறது. கே.ஆர்.பி. அணையின் கொள்ளளவு 52 அடி ஆகும்.



    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 648 கன அடி தண்ணீர் வருகிறது.

    இந்த தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுரை கூறி உள்ளனர்.
    Next Story
    ×