search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் இன்று 2 பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிராம் தங்கத்தை படத்தில் காணலாம்.
    X
    திருச்சி விமான நிலையத்தில் இன்று 2 பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிராம் தங்கத்தை படத்தில் காணலாம்.

    திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர்ஏசியா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பயணிகள் அப்துல்ஜலில் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை அழைத்து சென்று விசாரித்தனர்.

    முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் செயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட 116 கிராம் தங்க நகைகள் இருந்தன. இதனை அவர் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.


    இதேபோல் அந்த விமானத்தில் வந்த முத்து முகமது நாச்சியார் என்பவரும் தனது உடமைகளுக்குள் மறைத்து முழுமை பெறாத நகைகளாக 109 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகா ரிகள் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட மொத்த தங்க நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்து 342 ஆகும். இதையடுத்து தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×