search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரி கோவிலில் எதிரிகளை அழிக்கும் பூஜை செய்த தினகரன்
    X

    சிங்கம்புணரி கோவிலில் எதிரிகளை அழிக்கும் பூஜை செய்த தினகரன்

    சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலில் வடுக பைரவருக்கு எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்ட சத்ரு சம்ஹார பூஜை செய்து டி.டி.வி. தினகரன் வழிபட்டார்.
    சிங்கம்புணரி:

    அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், மதுரை அருகே மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் இரவில் மதுரையில் தங்கிய தினகரன், காலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் மனைவி, மகளுடன் வழிபாடு செய்தார்.

    அதன் பிறகு சென்னை புறப்பட்ட அவர், வழியில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலிலும் வழிபாடு செய்தார்.

    குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இந்த மலைக் கோவிலில் உள்ள தேனம்மை உடனுறை மங்கை பாகர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. குடவறைக் கோவிலான இங்கு சிவபெருமான், லிங்க வடிவில் இல்லாமல் மணக்கோலத்தில் சிற்பமாக உள்ளார். இங்கு தேன் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

    வெள்ளைப்பூ அணிந்து வெள்ளை உடையில் மங்கை பாகர் காட்சி அளிக்கிறார். கோவிலின் காவல் தெய்வமான வடுக பைரவர் சன்னதியில் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

    வடுக பைரவருக்கு எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்ட சத்ரு சம்ஹார பூஜை செய்து வழிபட்டார்.

    பின்னர் தினகரன், மனைவியுடன் கோ பூஜை செய்தார். தலைமை சிவாச்சாரியார் உமாபதி பூஜைகளை செய்தார். அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    பிரான்மலை கோவிலில் தினகரன், குடும்பத்தினருடன் கோ பூஜை செய்தார்.

    Next Story
    ×