search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு 1½ வயது சிறுவன் பலி
    X

    அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு 1½ வயது சிறுவன் பலி

    அந்தியூரில் 1½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அந்தியூரில் 1½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே பவானி சாலை பகுதியில் வசிப்பவர் பரமேஸ்வரன் (வயது 38). இவரது மகன் வருணியன் (1½).

    இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு ரத்த பரிசோதனை எடுத்து பார்த்தபோது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே மேல் சிசிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வருண்யன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    Next Story
    ×