search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சியின் போது தி.மு.க. ‘நீட்’ தேர்வை எதிர்க்காதது ஏன்?: தம்பித்துரை
    X

    காங்கிரஸ் ஆட்சியின் போது தி.மு.க. ‘நீட்’ தேர்வை எதிர்க்காதது ஏன்?: தம்பித்துரை

    காங்கிரஸ் ஆட்சியின் போது தி.மு.க. நீட் தேர்வை எதிர்க்காதது ஏன் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கேள்வி எழுப்பியுள்ளார்.
    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய மக்களால் போற்றப்படும் அப்துல்கலாமிற்கு ராமேசுவரத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் செல்கிறேன். பீகாரில் நிதிஷ்குமாரின் முடிவை பார்க்கும் போது அரசியலில் எந்த நேரத்திலும், எந்த மாற்றமும் நடக்கலாம் என தோன்றுகிறது.

    கடந்த 2012-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது உத்திர பிரதேச மாநிலத்தில் ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. அன்று ‘நீட்’ தேர்வை கண்டிக்காத தி.மு.க. இன்று ‘நீட்’ தேர்வை எதிர்ப்பதாக கூறுகிறது.

    ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. கலாம் நினைவு நாளில் மனிதச்சங்கிலி போராட்டம் அறிவிப்பு மக்களை திசை திருப்பும் செயலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×