search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், புகைப்படத்தை வழங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
    X

    ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், புகைப்படத்தை வழங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

    மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், தக்க விவரங்களுடன் தங்கள் புகைப்படத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் பெறப்படவில்லை என அறியப்படுகிறது.

    அவ்வாறு இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டை தாரர்கள் www.tnpds.gov.in இணைய முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை பதிவுசெய்து நுழையலாம்.

    அவ்வாறு நுழைந்த உடன், பயனாளரின் செல்போன் எண்ணிற்கு கிடைக்கப் பெறும் கடவுச்சொல்லினை பதிவு செய்தால் திரையில் தோன்றும் மின்னணு குடும்ப அட்டை விபரமாற்றம் என்ற பகுதிக்கு சென்று குடும்ப தலைவரது புகைப்படம் மற்றும் இதரவிவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். அவ்வாறில்லையெனில் புகைப்படம் பதிவேற்றம் செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னரே மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும். அட்டைதாரர்கள் வசதிக்கென கீழ் காணும் வழிமுறைகள் உள்ளது.

     அட்டைதாரர் அவர் தம் வசம் உள்ள இணைய வசதி வாயிலாக மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினைபதிவேற்றம் செய்யலாம்.

    அரசு இ-சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அவர் தம் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட ரேஷன் கடை பணியாளரிடம் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.

    மேலும், அட்டைதாரரின் பகுதிக்குட்பட்ட உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில்புகைப்படத்தை இதரவிவரங்களுடன் குடும்ப அட்டைநகலில் ஒட்டிவழங்கலாம்.

    சரியான விவரங்கள் மற்றும் புகைப்படம் இல்லாது மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்படாத அட்டைதாரர்கள் விபரம் நியாயவிலைக் கடையில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தபட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பின் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒருவழியினை பயன்படுத்தி விரைவில் மின்னணு குடும்ப அட்டைபெற இயலும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×