search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பில் மீண்டும் மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நீர்பிடிப்பில் மீண்டும் மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததை அடுத்து பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களாகவே மழை இல்லாததால் 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 21 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

    எனவே வைகை அணையில் தண்ணீரை தேக்கும் பொருட்டு பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 30 அடியை தாண்டியுள்ளது. இதனிடையே நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழை முற்றிலும் நின்று விட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் பெரியாறு மற்றும் வைகை அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    பெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 111.30 அடியாக உள்ளது. அணைக்கு 336 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1118 மி.கன அடி உள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 30.15 அடி. வரத்து 98 கன அடி. திறப்பு 40 கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 30.60 அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 73.96 அடி.

    பெரியாறு பகுதியில் 16.4, தேக்கடியில் 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×