search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்துகொண்ட சித்ரா
    X
    தற்கொலை செய்துகொண்ட சித்ரா

    கிணற்றில் குதித்து நர்சின் தோழி தற்கொலை: பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம் நீதிபதி விசாரணை

    பண்ருட்டி அருகே காதலர்களை அபகரித்ததால் நர்சை கொலை செய்த தோழி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே காதலர்களை அபகரித்ததால் நர்சு திவ்யாவை காதலனுடன் சேர்ந்து தோழி சித்ரா கொலை செய்து கெடிலம் ஆற்றங்கரையில் புதைத்தார். இந்தசம்பவம் குறித்து சித்ராவிடம் காடாம்புலியூர் போலீசார் விசாரித்தனர்.

    பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, பெண் போலீஸ் கெஜலட்சுமி உள்பட 4 பேர் திவ்யா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கெடிலம் ஆற்றங்கரைக்கு சித்ராவை அழைத்து சென்றனர். அங்கு திவ்யா புதைக்கப்பட்ட இடத்தை சித்ரா அடையாளம் காட்டினார்.

    மேலும் திவ்யா வைத்திருந்த செல்போன் மற்றும் பையை ஒரு கிணற்றின் அருகே வைத்திருப்பதாக சித்ரா போலீசாரிடம் கூறினார். இதையடுத்து சித்ராவை போலீசார் பாதுகாப்பாக அங்கு அழைத்து சென்றனர். அப்போது சித்ரா திடீரென்று போலீசாரின் கண் எதிரே அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்துக்கு பின்பு அவரது உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் பிடியிலிருந்து தப்பிஓடி சித்ரா தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவின்பேரில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் விசாரணை நடத்த முடிவு செய்தார். இன்று அவர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    சித்ராவை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஜெயதேவி, பெண் போலீஸ் கெஜலெட்சுமி உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×