search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிராமத்துக்கு 2 மாதத்துக்குள் பஸ் விட வேண்டும்: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிராமத்துக்கு 2 மாதத்துக்குள் பஸ் விட வேண்டும்: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிராமத்துக்கு 2 மாதத்துக்குள் பஸ் விட வேண்டும் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    சென்னை:

    வேலூர் மாவட்டம், மேட்டுக் குளம் கிராமத்தை சேர்ந்த நரேந்தர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

    காட்பாடியில் இருந்து 3-வது கிலோ மீட்டர் தூரத்தில் கிறிஸ்டியான்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி, பெரிய புத்தூர், கே.எஸ்.கே.நகர், மேட்டுக்குளம் உள்பட 10 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள், காட்பாடி செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. இத்தனைக்கும் கிறிஸ்டியான்பேட்டை, வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் தான் உள்ளது.

    ஆனாலும் இந்த கிராமத்துக்கு டவுன் பஸ்கள் வருவதில்லை. இதனால், இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், வேலைக்கு செல்லவும், மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்கும் ‘ஷேர் ஆட்டோவில்’ சென்று வருகின்றனர்.

    ‘ஷேர் ஆட்டோவில்’ செல்ல பண வசதி இல்லாத ஏழை மாணவர்கள், பள்ளிக் கூடத்துக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்கின்றனர். இந்த கிறிஸ்டியான்பேட்டை வழியாக 4 வழிச்சாலை சித்தூருக்கு செல்கிறது. எனவே, இந்த கிராமத்துக்கு பஸ் சேவை வழங்க அரசுக்கு எந்த இடையூறும் இல்லை.

    எனவே, பாகாயம் முதல் காட்பாடி செல்லும் வழித்தடங்களில் இயக்கப்படும் டவுன் பஸ்சை கிறிஸ்டியான்பேட்டைக்கும் வந்து செல்ல வேண்டும் என்று கடந்த மே மாதம் 23-ந்தேதி போக்குவரத்து செயலாளர், வேலூர் கலெக்டர், தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலம் நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தேன்.

    ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

    எனவே, கிருஸ்டியான்பேட்டை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி செய்துக் கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் செல்வம் ஆஜராகி வாதிட்டார்.

    பஸ் வசதி கேட்டு மனு தாரர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவை 2 மாதத்துக்குள் பரிசீலித்து, அந்த கிராமத்துக்கு பஸ் வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டும்’ என்று வேலூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×