search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

    குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 51 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகர்கோவில், ஜூலை. 21-

    குமரி மாவட்ட எல்லை யில் உள்ள கேரளா வில் கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் நோயால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    கேரளாவில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் பாதிப்பு குமரி மாவட்டத்தையும் தாக்கியது. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கா னோர் திருவனந்தபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களுக்கு வேலைக்காக சென்று வருகிறார்கள்.

    அவர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் குமரி மாவட்டத்திலும் பரவியது. இதற்கு தடுப்பு நடவடிக்கை கள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு காய்ச்சலை உருவாக் கும் கொசுக்களை அழிக்கும் பணியும் முடுக்கி விடப்பட் டது.

    இதன் மூலம் குமரி மாவட் டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லையென கூறப்பட்டது. ஆனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

    அவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது அதில், ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இத்தகைய பாதிப்பு உள்ளோரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தால்தான் குணப்படுத்த முடியும். எனவே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டெங்கு சிகிச்சைக்கு என தனி வார்டு திறக்கப்பட்டது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு காய்ச்சல் வார்டில் மட்டும் நேற்று வரை 15 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களை தவிர வெளி நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கிறார் கள். இதுபோல தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் 6 பேர் உள்நோயாளியாக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூ தனன் கூறும்போது, குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் 51 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

    இதற்கிடையே குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் வராமல் பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று சுகாதாரப் பணிகளை பார்வையிட்டார்.

    பல இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியினையும் ஆய்வு செய் தார். மேலும் பொதுமக்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தி னார்.

    டெங்கு காய்ச்சல் பாதிப் பில் இருந்து தப்பிக்கவும், அதுவராமல் பாதுகாக்கவும் நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்து என சித்த மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி, நகரில் மக்கள் கூடும் இடங்களில் இக்கசாயம் வழங்கப்பட்டது. இதனை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அருந்தினால் நோய் பாதிப்பில இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    குமரி மாவட்டத்தில் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஏற்பாடு செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அம்மா உணவகம், கோர்ட்டு வளாகம், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். பொதுமக்கள் கசாயத்தை குடித்து நோய் வராமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். * * * ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெறும் நோயாளியை பார்வையிட்ட ஆஸ்பத்திரி டீன் வடிவேல் முருகன் மற்றும் டாக்டர்கள்.

    Next Story
    ×