search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணின் கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது: வைகோ பேச்சு
    X

    பெண்ணின் கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது: வைகோ பேச்சு

    சாமளாபுரத்தில் மதுவிலக்கு வேண்டி போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது என்று வைகோ பேசினார்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சோமனூர் , கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், தென்னம்பாளையம், மற்றும் திருப்பூர் சாமளாபுரம் ஆகிய பகுதிகளில் பூரண மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்தியவர்களை கவுரவிக்கும் வகையில் ம. தி.மு.க சார்பில் பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா கோவை கருமத்தம் பட்டியில் நடந்தது .

    கோவை புறநகர் மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எ.கே , தங்கவேலு, கருமத்தம் பட்டி பேரூர் செயலாளர் சி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சு.ஆனந்தகுமார் வரவேற்றார் விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளார் வைகோ கலந்து கெண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டின் நலன் கருதி மதுவுக்காக நாங்கள் போராடுகிறோம். மதுவினால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி முதல் 30 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகிறது . மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க நினைத்தால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும். மதுவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவேன். மதுவுக்கு எதிராக போராடிய பெண்ணின் கன்னத்தில் போலீஸ் அதிகாரி அடித்தது காட்டு மிராண்டித்தனமான செயல். காவல்துறை அடிப்பதற்கு எந்த சட்டம், அதிகாரத்தை கொடுக்கிறது? அந்த போலீஸ் அதிகாரிக்கு அதிரடிப்படைக்கு எஸ். பி.யாக பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது.


    நதிநீர் பிரச்சனைகளில் மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. பஞ்சப்பிர தேசமாகவும் பாலை வனமாகவும் தமிழகம் மாறிவிடுமோ என பயத்தில் உள்ளேன். மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கக்கூடாது. அரசு முழு மதுவிலக்கு என அறிவிக்கவேண்டும் இல்லையென்றால் பூரண மது விலக்கை மக்களே நிறைவேற்றி விடுவார்கள்.

    இவ்வாறு வைகோ பேசினார்.

    முடிவில். சாமளாபுரம் பேரூர் கழக செயலாளர் ஆர், செல்வராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×