search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து 13-வது நினைவு தினம்: உயிரிழந்த குழந்தைகள் படத்திற்கு அஞ்சலி
    X

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து 13-வது நினைவு தினம்: உயிரிழந்த குழந்தைகள் படத்திற்கு அஞ்சலி

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினத்தையொட்டி குழந்தைகளின் நினைவிடத்தில் பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்க பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 94 குழந்தைகள் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். இந்த பரிதாப சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

    உயிரிழந்த குழந்தைகளின் நினைவு தினத்தை முன்னிட்டு தீ விபத்து நடந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கும்பகோணம் மேலக் காவிரியில் உள்ள குழந்தைகளின் கல்லறை தோட்டத்திற்கு சென்று குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்து அஞ்சலி செலுத்தினர். விளையாட்டு பொருட்களையும் வைத்து வணங்கி பெற்றோர் கண்ணீர் விட்டனர்.


    சிலர் தங்கள் வீடுகளிலும் குழந்தைகளின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது.ஜூலை16-ந் தேதியை பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்.

    குறைந்த பட்சம் அன்றைய தினம் கும்பகோணம் வட்ட அளவுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×