search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே பள்ளி மாணவி மாயமான வழக்கில் ‘திடீர்’ திருப்பம்
    X

    நெல்லை அருகே பள்ளி மாணவி மாயமான வழக்கில் ‘திடீர்’ திருப்பம்

    நெல்லை அருகே பள்ளி மாணவி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக பேஸ்புக் காதலனுடன் கோவைக்கு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த தென்றல் நகரை சேர்ந்தவர் சுப்பம்மாள்(வயது17). பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் பாளையில் உள்ள பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். சம்பவத்தன்று சுப்பம்மாள் பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பம்மாள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முதலில் அவர் தூத்துக்குடியை சேர்ந்த போலீஸ்காரருடன் சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த போலீஸ்காரரிடம் தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தனக்கும் அந்த மாணவிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தான் கடத்தவில்லை எனவும் கூறினார். இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் மாணவி சுப்பம்மாள் செல்போனில் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பதும், அதன்மூலம் கோவையில் ஒரு வாலிபரிடம் பழகி வந்ததும் தெரியவந்தது.

    கோவை சரவணம்பட்டியில் ஒரு செல்போன் கடை உள்ளது. அங்கு சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தை சேர்ந்த லிங்கம் என்ற வாலிபர் வேலை செய்து வருகிறார். அவர் சுப்பம்மாளின் பேஸ்புக் நண்பரானார். தொடர்ந்து அவர்கள் பேஸ்புக் மூலமே காதலித்ததாக தெரிகிறது.

    இதையடுத்து சம்பவத்தன்று நெல்லை வந்த லிங்கம் மாணவி சுப்பம்மாளை கடத்தி சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து சுப்பம்மாளை மீட்கவும், வாலிபர் லிங்கத்தை பிடிக்கவும் தாழையூத்து போலீசார் கோவை விரைந்துள்ளனர்.
    Next Story
    ×