search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.21,464-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட அன்று பவுன் ரூ. 22 ஆயிரத்து 64 ஆக இருந்த தங்கம் விலை படிப்படியாக சரிந்தது. கடந்த 6-ந் தேதி ஒரு பவுன் ரூ. 21 ஆயிரத்து 704 ஆக இருந்தது. அதன்பின்னர் விலை தொடர்ந்து குறைந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ. 72 குறைந்தது. ரூ. 21 ஆயிரத்து 632 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ. 168 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ 21 ஆயிரத்து 464 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 21 குறைந்து ரூ. 2,683-க்கு விற்கிறது.

    சர்வதேச சந்தையில் விலை நிலவரம், மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருகிறது. பங்கு சந்தையில் முதலீடு அதிகரித்து வருவதும் தங்கம் விலை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ. 39 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 39.60-க்கு விற்கப்படுகிறது.
    Next Story
    ×