search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் வீட்டு முன்பு பேனர் கிழிப்பு
    X

    வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் வீட்டு முன்பு பேனர் கிழிப்பு

    வாணியம்பாடியில் அமைச்சர் மற்றும் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் வீடுகளின் முன்பு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    வாணியம்பாடி:

    தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில், தனது தொகுதியான வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். ரம்ஜான் பண்டிகையையொட்டி அமைச்சர் நிலோபர் கபிலின் வீட்டு முன்பு, அவருடைய ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில், அமைச்சர் வீட்டு முன்பு அ.தி.மு.க.வினர் வைத்திருந்த பேனர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதையறிந்த அ.திமு.க.வினர் அமைச்சர் வீட்டு முன்பு திரண்டனர். பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.

    இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷாவின் வீடு, வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ளது. இவரது வீட்டு முன்பும், ரம்ஜான் பண்டிகையையொட்டி, காங்கிரசார் பேனர்களை வைத்திருந்தனர்.



    அஸ்லம்பாஷாவின் வீட்டு முன்பு இருந்த பேனர்களை, நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்து விட்டு தப்பினர். இதுகுறித்து வாணியம்பாடி டி.எஸ்.பி. சுந்தரத்திடம், சிறு பான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா புகார் அளித்தார்.

    புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. சுந்தரம் நேரடி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அஸ்லம்பாஷா வீடுகள் இருக்கும் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க.-காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்பில் உள்ளதால், வாணியம்பாடியில் பதட்டம் நிலவுகிறது.
    Next Story
    ×