search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - அறை இடிந்து தரைமட்டம்
    X

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - அறை இடிந்து தரைமட்டம்

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த அறை இடிந்து தரைமட்டமானது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் இன்று காலை 6.30 மணிக்கு அந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மணி மருந்துகள் வெடித்து சிதறியதால் அந்த அறை இடிந்து தரை மட்டமானது.

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்தவர் கிரி. இவர் சிவகாசி பேர்நாயக்கன்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தரை சக்கரம் உள்ளிட்ட பல்வேறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இதற்காக ஆலையில் 18 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு, வெடிமருந்து கலவை செய்வது உள்ளிட்ட பல பணிகளை செய்து வந்தனர்.

    நேற்று வழக்கமாக விடுமுறை நாளாகும். ஆனால் அதிக தயாரிப்பு இருந்ததால் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.

    தரை சக்கரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மாலை நேரத்தில் மீதம் இருந்த பட்டாசு கலவை மணி மருந்தை ஒரு அறையில் வைத்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு அந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மணி மருந்துகள் வெடித்து சிதறியதால் அந்த அறை இடிந்து தரை மட்டமானது.

    தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். காலை நேரத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    விபத்து குறித்து பட்டாசு தனி தாசில்தார் சங்கரபாண்டியன், வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×