search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் 14 வருடங்களாக தலைமறைவாக இருந்த சந்தனமர கடத்தல்காரன் கைது
    X

    கோத்தகிரியில் 14 வருடங்களாக தலைமறைவாக இருந்த சந்தனமர கடத்தல்காரன் கைது

    கோத்தகிரியில் 14 வருடங்களாக தலைமறைவாக இருந்த சந்தனமர கடத்தல்காரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி கட்டப்பெட்டு வனச்சரகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் கோத்தகிரி கூக்கல்தொரை அண்ணா நகர் பாட்ஷா தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் ரவி (வயது 38) ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து தலைமறைவான ரவியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 14 வருடங்களாக ரவி தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட ரவி தனது சொந்த ஊரில் பதுங்கியுள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர் மகேஷ், விவேகானந்தன், வனக்காவலர் சுரேந்திரன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று ரவியை கைது செய்தனர். கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரவி பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×