search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்நடை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை மாதம் கவுன்சிலிங்: துணை வேந்தர்
    X

    கால்நடை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை மாதம் கவுன்சிலிங்: துணை வேந்தர்

    நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை மாதம் 19,20,21-ந்தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கான மருத்துவ சிகிச்சை குறித்த கருத்தரங்கு இன்று தொடங்கியது.

    கருத்தரங்கை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தொடங்கி வைத்தார்

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்நடை மருத்துவ படிப்பிற்கு இந்த ஆண்டு 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் கடந்த ஆண்டை காட்டிலும் 3 ஆயிரம் பேர் அதிகளவில் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது என்றார்.

    ஜூன் 30-ந்தேதி கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடைபெறும் என்றார்.

    தேசிய விவசாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், அம்மா நடமாடும் அவசர சிகிச்சை ஊர்தியும் செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறது. முடியாத நிலையில் உள்ள கால்நடைகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    2021-ம் ஆண்டு மத்திய அரசு விவசாயிகளின் லாபத்தை இருமடங்காக அதிகரிக்க திட்டம் தீட்டி உள்ளனர். இதற்கு கால்நடை மருத்துவர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆகஸ்டு மாத இறுதிக்குள் சி.டி. ஸ்கேன் வசதி நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஏற்படுத்தப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்ர மணியம் உள்பட பலர் இருந்தனர்.
    Next Story
    ×