search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் எம்.பி. தேர்தல்: புதுவையில் வாக்குப்பதிவு
    X

    பிரான்ஸ் எம்.பி. தேர்தல்: புதுவையில் வாக்குப்பதிவு

    பிரான்ஸ் எம்.பி. தேர்தல், புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பலரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

    புதுச்சேரி:

    இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் புதுவை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

    பிரெஞ்சுக்காரர்கள் புதுவைக்கு சுதந்திரம் அளித்து வெளியேறிய போது புதுவையை சேர்ந்த மக்களில் பலருக்கும் பிரெஞ்சு குடியுரிமை வழங்கினார்கள். அவர்கள் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடு ஆகிய இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

    பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல், எம்.பி. தேர்தல் போன்றவை நடக்கும் போது புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் ஓட்டு போடுவது வழக்கம்.

    பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எம்.பி.க்கள் தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டு தேர்தல் விதிகளின்படி 50 சதவீதம் வாக்குகள் பெற்றால் தான் எம்.பி.யாக தேர்வாக முடியும். இல்லை என்றால் 2-வது கட்ட தேர்தல் நடத்தப்படும்.

    அதன்படி இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. புதுவையில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் ஓட்டு போடுவதற்காக இங்கும் வாக்குப்பதிவுகள் நடந்தன.

    பிரெஞ்சு தூதரகம் மற்றும் லிசே பிரான்சே கல்லூரி ஆகியவற்றில் ஓட்டு சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. புதுவையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓட்டு உரிமை இருந்தது. அவர்கள் காலையில் இருந்தே வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள். பலரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

    இதே போல காரைக்காலிலும் தனியாக ஓட்டுப் பதிவு நடந்து வருகிறது.

    ஓட்டுப்பதிவு முடிந்து இன்று இரவு பிரெஞ்சு தூதரகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். உடனடியாக முடிவுகளும் அறிவிக்கப்படும்.

    Next Story
    ×