search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையை அழகுபடுத்த சாலையின் தடுப்பு சுவர்களில் மலர்கள்: மாநகராட்சி புதிய ஏற்பாடு
    X

    சென்னையை அழகுபடுத்த சாலையின் தடுப்பு சுவர்களில் மலர்கள்: மாநகராட்சி புதிய ஏற்பாடு

    சென்னை மாநகரை அழகுபடுத்துவதற்காக சாலையோர தடுப்பு சுவர்களில் அழகு மலர்கள் பூக்கும் செடி-மரங்கள் மாநகராட்சி சார்பில் விரைவில் நடப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர வீதியோரங்களில் நிழல் தருவதற்காகவும், பசுமையாக காட்சி அளிப்பதற்காகவும் மாநகராட்சி சார்பில் நடப்பட்டு இருந்த மரங்கள் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வார்தா புயலில் சரிந்து விழுந்தன.

    சென்னை மாநகர் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்து விழுந்ததால் மாநகர வீதிகள்களை இழந்து காணப்பட்டது.

    தற்போது மழை காலம் தொடங்க இருப்பதையொட்டி மாநகர வீதிகளில் மரங்கள், செடிகள் நடுவதற்காக மாநகராட்சி பூங்கா துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டது. சென்னை மாநகரை அழகுபடுத்தும் விதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் வண்ண மலர்கள் பூக்கும் செடி, கொடி, மரங்கள், வீதியோரங்களில் அழகு பூக்கள் பூத்து குலுங்கும் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர 7 மீட்டர் வீதி, சிறிய தெருக்களிலும், 12 மீட்டர் வரையிலான நடுத்தர வீதிகளிலும், 12 மீட்டருக்கு மேற்பட்ட பெரிய வீதிகளிலும் இந்த மரக்கன்றுகள் செடி, கொடிகள் நடப்படுகின்றன. வறட்சியை தாங்கும் சக்தி இந்த செடி, கொடி, மரங்களுக்கு உண்டு.

    மேலும் கடற்கரை சாலையோரங்களை அழகுபடுத்த உப்பு காற்று, வெப்பம், உப்பு மணலில் வளரும் வகையிலான மரங்கள், செடிகள் நடப்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி பூங்கா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் வார்தா புயல் பாதிப்பால் பல ஆயிரம் மரங்கள் சரிந்து விழுந்து விட்டன. இதனால் நகரின் பசுமை நிறைந்த இயற்கை அழகு குறைந்து விட்டது. இதனை சரி செய்வதற்காக பசுமை மரங்களை நடுவதற்கும், அழகு பூக்களை பூக்கும் மரங்கள், செடிகள் நடதிட்ட மிட்டுள்ளோம். மழைகாலம் தொடங்குவதற்கு முன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    சென்னை நகரில் மரங்கள் நடுவதற்கு தேவையான இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். புல்டோசர் மூலம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மரங்களை பிடுங்கி உடனடியாக நடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மரங்கள் நடுவதற்காக என்.ஜி.ஓ., மாநகராட்சி பூங்கா துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுவார்கள். அந்தந்த மாநகராட்சி மண்டல அதிகாரிகள் அனுமதியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×