search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட்டை மீட்க நடவடிக்கை எடுப்பேன்: முன்னாள் உரிமையாளர் பேட்டி
    X

    கொடநாடு எஸ்டேட்டை மீட்க நடவடிக்கை எடுப்பேன்: முன்னாள் உரிமையாளர் பேட்டி

    கொடநாடு எஸ்டேட்டை நான் மீண்டும் திரும்பி வாங்குவது தொடர்பாக எனது வக்கீலுடன் ஆலோசித்து வருகிறேன். நான் இழந்த எனது சொத்து எனக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என பீட்டர் கிரேக் ஜோன்ஸ் கூறினார்.
    ஊட்டி:

    கொடநாடு எஸ்டேட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்பவர் விற்றார்.

    இந்த நிலையில் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    கடந்த 1992-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் எனக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை ரூ.7.6 கோடி விலைக்கு கேட்டனர். அப்போது அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் என்னால் மறுக்க முடியவில்லை.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி மூலமாக பிரச்சினை எழுந்த போது அவர்கள் எஸ்டேட் வாங்குவதை தவிர்த்தனர். மீண்டும் 3 ஆண்டுக்கு பின் எஸ்டேட்டை வாங்கி விட்டனர்.

    அப்போது நான் மேலும் ரூ.7 கோடி பணம் கேட்டேன். அவர்கள் தரவில்லை. என்னால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அமைதியாக இருந்து விட்டேன்.

    பின்னர் ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் கொடநாட்டை ஒட்டியுள்ள மேலும் 300 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை வாங்கி விட்டனர்.

    கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா வசமானதால் நான் கூடலூர் நடுவட்டம் பகுதிக்கு சென்று விட்டேன். அங்கே குத்தகை அடிப்படையில் எஸ்டேட் வாங்கி பார்த்து வருகிறேன்.

    சொத்து குவிப்புக்கு பின் கொடநாடு எஸ்டேட் அரசு வசம் போய் விட்டது. கொடநாடு எஸ்டேட்டை நான் மீண்டும் திரும்பி வாங்குவது தொடர்பாக எனது வக்கீலுடன் ஆலோசித்து வருகிறேன். நான் இழந்த எனது சொத்து எனக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×