search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு பருவமழை அறிகுறி: குமரி மாவட்டத்தில் சாரல் மழை
    X

    தென்மேற்கு பருவமழை அறிகுறி: குமரி மாவட்டத்தில் சாரல் மழை

    தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் நேற்று பகலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தொடங்கி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதம் வரை பெய்யும். கேரளாவில் தொடங்கும் இந்த மழை மாநில எல்லை பகுதியில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழையாக கொட்டும்.

    கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. எனவே தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

    இந்தநிலையில் கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

    கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் நேற்று பகலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது. வானத்தில் இருந்து தூவானம் போல் வீசும் இந்த சாரல் குமரி மாவட்ட பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    அக்னி நட்சத்திர வெயில் கொடுமையால் அவதிப்பட்ட வந்த மக்கள் தற்போது சாரல் மழையால் ஏற்பட்டுள்ள குளிர்ச்சியை அனுபவித்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகளில் இன்று காலையும் சாரல் மழை நீடித்தது. பேச்சிப்பாறை அணைக்கு 52 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 9.45 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 18.25 அடியாக உள்ளது.
    Next Story
    ×