search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை: தனி மனிதனின் அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரானது - சீமான் கண்டனம்
    X

    மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை: தனி மனிதனின் அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரானது - சீமான் கண்டனம்

    மத்திய அரசின் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கும் அறிவிப்பு தனி மனிதனின் அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சிபீடத்தில் ஏறியது முதல், தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்திட பல்வேறு திட்டங்களினால் காய் நகர்த்தி வருகிறது. அதில் ஒன்று தான் நமது உணவுப் பழக்க வழக்கத்தில் திணித்து இருக்கிற கட்டுப்பாடுகள். குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதை அடியோடு தடைசெய்யும் விதமாக மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடை.

    ஒரு அரசோ, சட்டங்களோ தீர்மானிக்க இயலாத அல்லது தீர்மானிக்கக் கூடாத தனிமனிதனின் அடிப்படை சுதந்திரமான உணவுப்பழக்கவழக்கத்தில் தனது கருத்தை அல்லது தத்துவத்தைத் திணிக்க முயல்வதன் மூலம் பாஜக அரசின் பாசிசமுகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

    இத்தடை தனிமனிதனின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல. விவசாயிகளுக்கும் எதிரானது. மாடுகளை வாங்கி வளர்த்து விற்று வருமான மீட்டி வாழ்க்கை நடத்தும் பல கோடி விவசாயிகள் இந்தத் தடையினால் வறுமையில் தள்ளப்படுவார்கள். விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    மாட்டிறைச்சி ஏற்று மதியில் உலகிலேயே முதலிடத்தில் திகழும் இந்திய நாட்டின் இச்செயலானது மக்களிடையே பெரும் குழப்பத்தினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க. தன்னை இயக்குகின்ற கரமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவை நிறை வேற்ற முயல்கிறது என்பது தெளிவாகிறது.

    மத்திய அரசானது இத்தடைச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று வெகு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையேல், இதுபோன்ற தடைகளைத் தகர்த்தெறிய மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டங்களை நாம் தமிழர் கட்சியானது முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×