search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த் மிரட்டலுக்கு அஞ்சாமல் புதுகட்சி தொடங்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
    X

    ரஜினிகாந்த் மிரட்டலுக்கு அஞ்சாமல் புதுகட்சி தொடங்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

    ரஜினிகாந்த் மிரட்டலுக்கு அஞ்சாமல் புதுகட்சி தொடங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் கால்நடைகளை காப்பற்றும் விதமாக, தமிழக விவசாயிகளின் நாட்டு பசுக்களை காக்க இறைச்சிக்கு மாடுகளை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது வரவேற்கதக்கது. தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சட்ட விரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்பட்டு, கொன்று இறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதை தடுக்கும் விதமாக மத்திய அரசு இந்த சட்டம் கொண்டுவந்ததை இயற்கை ஆர்வலர்களும், விவசாய ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வரவேற்கிறார்கள்.

    மாட்டிறைச்சி ஒரு மதத்தினரின் உணவு என கூறுவது கண்டிக்கத்தக்கது. மாடு விவசாயம் மற்றும் சமய உணர்வுடன் சம்பந்தப்பட்டது. இடது சாரிகளும், திராவிட கட்சிகளும் உணவு சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டதாக நல்ல சட்டத்தை திசை திருப்புகிறார்கள். ஸ்டாலின் அதை மதக்கலவரமாக மாற்ற முயற்சிக்கிறார். இதற்காக ஸ்டாலின் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசை காப்பாற்ற அமைச்சர்களின் லஞ்ச ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அடுத்த 4 ஆண்டுகளில் நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா? என பல கருத்துக்கள் நிலவுகிறது. ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க சில அமைப்புகள் மற்றும் சில திராவிட கட்சிகள் அவரை மிரட்டுகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எம்.ஜி.ஆரை பயன்படுத்தியது போன்று, திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். ரஜினி வேறு கட்சியில் இணையாமல் மராட்டியத்தில் பால்தாக்கரே போன்று தனி இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வர இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×