search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தூர் எக்ஸ்பிரஸை சூப்பர் பாஸ்ட் ரெயிலாக அறிவிக்க வேண்டும்: த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம்
    X

    செந்தூர் எக்ஸ்பிரஸை சூப்பர் பாஸ்ட் ரெயிலாக அறிவிக்க வேண்டும்: த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம்

    செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சூப்பர் வேக ரெயிலாக அறிவித்து காலை 9 மணிக்குள் சென்னையை அடையும் வகையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஆறுமுகநேரி:

    திருச்செந்தூர் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் ஆறுமுகநேரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப் பினர் தங்கமணி, நகர தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மகாராஜன் வரவேற்று பேசினார்.

    மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், மேலிடப் பார்வையாளர் சிந்தா சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    தூத்துக்குடி மாநகர தலைவர் எடிசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீதர், ரவிக்குமார், காயல்பட்டினம் நகர தலைவர் ரஷீத், நா.முத்தையாபுரம் அப்பாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிக்கு புதிதாக தனிக்குடி நீர் தட்டம் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும். குளங்கள் மற்றும் வாய்க்கால் களை தூர்வார மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருச்செந்தூர் கோவில் விசாக திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும்.  செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சூப்பர் வேக ரெயிலாக அறிவித்து காலை 9 மணிக்குள் சென்னையை அடையும் வகையில் தென்னக ரெயிவே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×