search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜுன் 1 முதல் ஆதார் உள்ள விவசாயிகள் மட்டுமே உரம் வாங்க முடியும்
    X

    ஜுன் 1 முதல் ஆதார் உள்ள விவசாயிகள் மட்டுமே உரம் வாங்க முடியும்

    மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் துறை இணைந்து வரும் ஜுன் 1-ந்தேதி முதல் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் கைரேகையை விற்பனை எந்திரத்தில் பதிவு செய்து உரம் வாங்கும் முறையை அமல்படுத்தப்பட உள்ளது.
    மதுரை:

    பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் துறை இணைந்து வரும் ஜுன் 1-ந்தேதி முதல் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் கைரேகையை விற்பனை எந்திரத்தில் பதிவு செய்து உரம் வாங்கும் முறையை அமல்படுத்தப்பட உள்ளது.

    இதற்காக முதல் கட்ட அறிமுக பயிற்சி தனியார் மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர்களுக்கு உர தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து தகுதியான 147 தனியார் விற்பனையாளர்கள் மற்றும் 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு விற்பனை முனை எந்திரம் முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது.

    ஜுன் 1 முதல் உரம் வாங்க வருபவர்கள் ஆதார் எண் விபரங்களை விற்பனை முனை எந்திரத்தில் பதிவு செய்து தங்களின் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

    ஆதார் எண்ணும், கைரேகையும் ஒத்திருந்தால் மட்டுமே அடுத்த கட்டமாக உரம் அளவு விபரத்திற்கு செல்ல இயலும். உரம் வாங்கும் விவசாயிகளுக்கு உடனடியாக ரசீது எந்திரம் மூலம் வழங்கப்படும். இதனால் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.

    மத்திய அரசு உரத்திற்கு மானியமாக அதிக தொகை உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. தற்போது இந்த முறையினால் அந்த மாதம் சில்லரை விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு எவ்வளவு உரம் விநியோகம் செய்யப்பட்டதோ அதற்கான மானியத் தொகை மட்டுமே உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதனால் உரங்கள் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதுடன், விவசாயிகள் பயிருக்கு தேவையான சமச்சீரான உரங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

    வட்டார உர ஆய்வாளர்கள் உரம் இருப்பு, தினசரி விநியோகம் செய்வதை கண்காணிக்க இத்திட்டத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×