search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகமே சிரிக்கும் வகையில் சென்னையில் போராட்டம்: அய்யாக்கண்ணு
    X

    உலகமே சிரிக்கும் வகையில் சென்னையில் போராட்டம்: அய்யாக்கண்ணு

    ஒரு வாரத்துக்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் உலகமே சிரிக்கும் வகையில் சென்னையில் போராட்டம் நடத்த போவதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 16 விவசாயிகள் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரை சந்தித்து பேசினர்.

    பின்னர் நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு அளித்த பேட்டி வருமாறு:-

    விளை பொருட்களுக்கு லாபகரமான விலை, கரும்புக்கு உரிய விலை, கிசான் கிரெடிட் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது பற்றி டெல்லி யில் நடந்த விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மகன், மகள் அல்லது நிலம் இருந்தாலும் 60 வயதான விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஏற்கனவே முதல்- அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதுபற்றி பேசுவதற்காக முதல்-அமைச்சர் அழைத்திருந்தார். ஆனால் இன்று அவரை சந்திக்க முடியவில்லை.

    கடன் பெற்றுள்ள விவசாயிகளின் நகை, நிலம் ஏலம் விடும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும். பென்சன் பணம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. கரும்புக்கு நிலுவை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், முத்தரப்பு பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றெல்லாம் வேளாண் துறை செயலாளர் உறுதி அளித்துள்ளார்.

    விவசாயிகளிடம் போராடும் உணர்வை தூண்டிய வ.உ.சிதம்பரானார் பெயரில் விருதை உருவாக்கி விவசாயிகளுக்கு விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அமைச்சரும், அதிகாரியும் உறுதி அளித்தபடி ஒரு வாரத்தில் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் சென்னை சேப்பாக்கத்தில் உலகமே பார்த்து சிரிக்கும் அளவுக்கு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×