search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களை பொறுத்தமட்டில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.



    நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, சூளகிரியில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பென்னாகரத்தில் 3 செ.மீ. மழையும், ஒகேனக்கலில் 2 செ.மீ. மழையும், தளி மற்றும் நடுவட்டத்தில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    Next Story
    ×