search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்
    X

    வேதாரண்யத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார்.
    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோ-ஆப்டெக்ஸ் 195-வது விற்பனை நிலையம் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். 



    குளிரூட்டப்பட்ட இந்த விற்பனை நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியதாவது:-

    வேதாரண்யம் நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு புதுவரவாக எண்ணற்ற வடிவமைப்புகளில் காஞ்சி பட்டுப்புடவைகள், சேலம் பட்டுப்புடவைகள், மென்பட்டுப்புடவைகள், முகூர்த்தப் பட்டுப்புடவைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், சிறுமுகை காட்டன் சேலைகள், குர்த்தீஸ், லினன்ஃகாட்டன் சட்டைகள், குலட் மெத்தை விரிப்புகள் மற்றம் ஏற்றுமதி துண்டுகள், பிரிண்டட் போர்வைகள் உள்ளிட்ட அனைத்து ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.



    இந்த வேதாரண்யம் புதிய விற்பனை நிலையத்திற்கு 2017-18 ஆம் ஆண்டிற்கு ரூ.30.00 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த விற்பனை நிலையத்தினைப் பார்வையிட்டு, கைத்தறித் துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் டி.என்.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன உப தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம், கடலூர் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்  டி.ராமலிங்கம், தேத்தாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.கிரிதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மீ.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×